
ஒளி மட்டும் மொழியாய்..!!
முதன்முறையாய் நான் உன்னை தீண்டினேன்..!
எதிர்பாராமல், எதேச்சையாய்....நேருக்குநேர் மோதிக்கொண்டோம்..!
அழகாய் விலகி, நளினமாய் "மன்னிக்கவும்" என்றாய். நான் எரிச்சலோடு,
"யாரடா இது?" என்பதாய் கோவித்து எழுந்தேன். எதிரிலே நீ..!!
நீயானதால் என் கோபமும் எரிச்சலும் எங்கோ மறைவதை உணர்ந்தேன்.
மனதுக்குள்ளே நாம் மோதிய கணங்களை மட்டும் மீண்டும் மீண்டும் ஓடவிட்டு ரசித்தேன்.
என்முன்னே மெளன மொழி..! ஒளி மட்டும் ஒரே மொழியாய்..!! நின் அசைவுகள் வாக்கியங்களாய்..!! மீண்டும் மீண்டும்...!!
நீ சொன்ன "மன்னிக்கவும்" மட்டும்
அம்மொழியின் அந்தத்தை அலங்கரித்தது..! மீண்டும் மீண்டும்..!
அடி கள்ளி..!! உனக்கு புரியவில்லையா..?
நீ விட்டுச்சென்ற ஒளிமொழியின் உள்ளர்த்தம்..?!!
No comments:
Post a Comment