
மழைபெய்து ஓய்ந்திருந்தது..!
அவளுக்காக காத்திருந்தேன்..!
குளித்த ஈரத்தோடு வந்தாள் - அந்த
வாசத்தில் வசமிழந்தேன்..!
சட்டென அருகே வந்து
வேகமாய் தலையசைத்து
கேசத்து நீர்த்திவளைகளால்
பூமிக்குக் கொணர்ந்தாள்..!
மழைமெழுகிய சாலைகள்..!
கைகோர்த்து நடந்தோம்..!
சட்டென தேங்கினாள்..! - நான்
எதார்த்தமாய் நடந்தேன்..!
வேகமாய் பின்னிருந்து வந்து - அந்த
வேய்களின் கிளையசைத்து ஓடினாள்..!
தாரையால் நனைகிறேன்..! - தாமதமாய்
வந்திறங்கிய தாரையால் நனைகிறேன்..!
இன்னுமொருமுறை அவள் ஈரதேகம்
தேகத்து வாசத்தோடு…கேசத்து
நீரெலாம் நினைவுக்கு வந்தகன்றது..!
கோபித்து..புன்னகைத்து..கட்டி
கொஞ்சம் அவளையும் நனைத்தேன் - காதலால்..!
No comments:
Post a Comment