
அவள் இதழ் விரித்து அமைதியாய்..!
அவள் மேல் அவன்..
அவளது அந்தரங்க உறுப்புகள் கூட
அவனது ஆளுமையில்... அதோ..!
சுகிக்கிறான்.. சுவைத்து ருசிக்கிறான்..!
எனக்கும் உனக்குமான நெருக்கம்
எங்கே போய் மறைந்தது..?
என்னை ஏமாற்றும் எண்ணம்
எப்படி உதித்தது உனக்குள்ளே..!!
என் தொலையுணர்வு எனை தூண்டியது..!!
உணர்வுகள் பொங்க உனை நோக்கி விரைகிறேன்..!
அறவம் உணர்ந்து அவன் விரைய முயல்கிறான்..!
உன் அதரங்களில் அவன்
விரல்களின் இறுதித் தீண்டல்..!! - ஆ..!
வலிக்கிறது.. என் இதழ்களில்.. இதயமும் தான்..!!

கண்டுவிட்டேன்..!!
வனப்பான இறகுகள் விரித்து..
விலகிப் பறக்கிறான்...!
செல்லும் வழியினில் எனை
செல்ல தீண்டல் புரிகிறான்..!
உன் இதழில் அவன் இட்ட எச்ச்ம்
இதோ என் கன்னத் திரைகளிலும்..!!
ஏதும் ஆகவில்லை என்பதாய்
தலையசைக்கிறாய் நீ..!!
எனக்குள்ளே எத்தனை பூகம்பம்..!!
என் வீட்டு வெள்ளை ரோஜாவே..!!
அடுத்த வண்ணத்துப்பூச்சி வராமல்
தடுக்க அரண் அமைக்கவா உனக்கு..?
அயலினம் சேர்ப்பதில் அவனுனக்கு உதவி..!
அவனினம் வளர்ப்பதில் நீயவனுக்கு உதவி..!
கொடுத்து பெறும் நீங்கள்..!
பெறுவதற்க்காக கொடுப்பவன் நான்..!
உன்னது காதல்,
என்னது காமம்..!!

இனி நான் பதறுவதற்க்கில்லை..!
வாழ்க இனிதே......!!
6 comments:
Koduthu Perum Neengal
Peruvatharkaga Kodukum Naan!!
Who is this Naan?
naan - naaney thaan.
நண்பரே!!
கவிதை நல்லா இருக்குது..
ஒரு சந்தேகம்..
தொலையுணர்வு அப்டின்னா என்ன ?
கவிதையின் தலைப்பு - என் முதல் தூண்டல் -- கவிதை எழுதுவதற்கா ?
நன்றி சிங்கை சிவா அவர்களே..!
தொலையுணர்வு என்பது Telepathy
"என் முதல் தூண்டல்" இந்த வலைப்பதிவு துவங்கிய சமயத்தில் .. பதிவிற்க்காக விளைந்த முதல் தூண்டல்.
நன்றி சிங்கை சிவா அவர்களே..!
தொலையுணர்வு என்பது Telepathy
"என் முதல் தூண்டல்" இந்த வலைப்பதிவு துவங்கிய சமயத்தில் .. பதிவிற்க்காக விளைந்த முதல் தூண்டல்.
அருமை.
-ஞானசேகர்
Post a Comment