Wednesday, September 09, 2009

சொல்லாமல்...

 

சிறு சண்டை சிற்றுண்டியின் போது...

அதற்க்குப்பின் அவள் பேசவில்லை..!

வழக்கமான செயல்கள் செய்தாள்..!

வாஞ்சை இல்லாதவள் போல் வழியனுப்பினாள்..!

"சாயங்காலம்..." என பேச்செடுத்தாள்..!

என் கண்கள் பார்த்து தானே நிறுத்தினாள்..!

எதிரெ கடுகடுவென்றிருந்து போகும்

வழியெலாம் புன்னகைத்து நகர்ந்தேன்..!

 

வழக்கத்திற்கு மாராய் சீக்கிரம் வீடு வந்தென்..!

வாங்கிய மல்லிகையை கோபத்தோடு கொடுத்தேன்..!

கோபம் குறையாதவளாய் வாங்கிக் கொண்டாள்..!

"கிளம்பு..! கோயிலுக்கு போகலாம்..!" என்றேன்..!

புரியாதவாய் பார்வையில் ஒரு கேள்வி..!

"காலையின் நீதானே.." என்பதாய் நானொரு பார்வை..!

உதடுகள் துடித்தன.. அது

உள்ளூர புன்னகை உதித்தலின் அறிகுறி..!

புரிதலை அதற்கு மேல் மறைக்க முடியாமல்

பொய்க்கோபம் தோற்றது..!

நானும் ஒரு சிறு புன்னகை தந்தேன்..

"இது கூட அறியாதிருந்தால் இத்தனை காலம்

உன்னோடு இருந்ததின் பொருளென்ன?" என்பதாய்...

கலாச்சார கட்டுகளுக்கடங்கி..

கட்டியணைத்தாள்..!

கவித்துவமாய் தோள் சாய்ந்தாள்..!

எஞ்சியவை இரவுக்கென்றாள்..!

அத்தனையும் கண்களால் மட்டும்..

 

இப்படியே சொல்லாமல் சொல்லப்படுகின்றன

சில நூறு வார்த்தைகள்..!