Tuesday, June 20, 2006

தொட்டி(ல்)

தொட்டு தொட்டு துன்பப் பட்டு
விட்டில் கெட்டும் விளக்கொடு போல
கெட்டு கெட்டும் திட்டு கேட்டும்
தொட்டிலாய் தொடருதே குப்பைத்தொட்டி..!

Sunday, June 18, 2006

காதல்-வலை

நட்ட நடு நிசி.
வெட்ட வெளிதனில் கட்டுமரம்.
நினைவுகளை நிலவொளியில் உலர்த்திக் கொண்டிருந்தேன்.
என் நரம்பு நாளங்களில் நின் அம்சங்கள் அழியாமல்,
நீ தொட்ட கடைசி எச்சிலும் காய்ந்து போனதே..!!

ஒரு பகல் ஒரு யுகமாய்.. நகர,

இரவு வந்தது மீனவ கும்பலோடு.

சில நாழிகைகள்.. மீண்டும் உனைப்புணர வாய்ப்பு..!
மீன்களை தழுவிக்கொண்டு உனைப்பிரிந்தேன்.
மீண்டும் உனைச்சேர்வேன் என்ற எதிர்பார்ப்பில்....!!

Sunday, June 11, 2006

பெண் மோகம்..!!

நிறமா? நின் சதையா? சதைபுணர்ந்த சரீரமா?
சட்டென மனங்கவரும் உருவக் கட்டமைப்பா?
பட்டே நீயெனக்கு பாவத் தூண்டுதலா?
விட்டேன் நீயென்னை விலகிப்போ நீங்கி..!!

என் முதல் தூண்டல்..!!


அவள் இதழ் விரித்து அமைதியாய்..!
அவள் மேல் அவன்..
அவளது அந்தரங்க உறுப்புகள் கூட
அவனது ஆளுமையில்... அதோ..!
சுகிக்கிறான்.. சுவைத்து ருசிக்கிறான்..!

எனக்கும் உனக்குமான நெருக்கம்
எங்கே போய் மறைந்தது..?
என்னை ஏமாற்றும் எண்ணம்
எப்படி உதித்தது உனக்குள்ளே..!!

என் தொலையுணர்வு எனை தூண்டியது..!!
உணர்வுகள் பொங்க உனை நோக்கி விரைகிறேன்..!

அறவம் உணர்ந்து அவன் விரைய முயல்கிறான்..!
உன் அதரங்களில் அவன்
விரல்களின் இறுதித் தீண்டல்..!! - ஆ..!
வலிக்கிறது.. என் இதழ்களில்.. இதயமும் தான்..!!


கண்டுவிட்டேன்..!!

வனப்பான இறகுகள் விரித்து..
விலகிப் பறக்கிறான்...!
செல்லும் வழியினில் எனை
செல்ல தீண்டல் புரிகிறான்..!

உன் இதழில் அவன் இட்ட எச்ச்ம்
இதோ என் கன்னத் திரைகளிலும்..!!

ஏதும் ஆகவில்லை என்பதாய்
தலையசைக்கிறாய் நீ..!!
எனக்குள்ளே எத்தனை பூகம்பம்..!!
என் வீட்டு வெள்ளை ரோஜாவே..!!
அடுத்த வண்ணத்துப்பூச்சி வராமல்
தடுக்க அரண் அமைக்கவா உனக்கு..?

அயலினம் சேர்ப்பதில் அவனுனக்கு உதவி..!
அவனினம் வளர்ப்பதில் நீயவனுக்கு உதவி..!
கொடுத்து பெறும் நீங்கள்..!
பெறுவதற்க்காக கொடுப்பவன் நான்..!
உன்னது காதல்,
என்னது காமம்..!!


இனி நான் பதறுவதற்க்கில்லை..!
வாழ்க இனிதே......!!